சிரம்பான், ஏப்ரல் 24 :
இங்கு அருகிலுள்ள கம்போங் பாரு சைட் ஏ, தானா மேரா, லுகூட், போர்ட்டிக்சன் ஆகிய இடங்களில் உள்ள 19 உரிமம் இல்லாத பண்ணைகளில் உள்ள அனைத்து பன்றிகளும் அதிகாரிகளுக்குத் தெரியாமல் பண்ணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாக நம்பப்படுகிறது என்று நெகிரி செம்பிலான் விவசாயம் மற்றும் வேளாண்மை தொழில்துறை நடவடிக்கைக் குழுவின் தலைவர் டத்தோ பக்ரி சாவிர் தெரிவித்துள்ளார்.
பண்ணை உரிமையாளர்களால் அறியப்படாத இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, பண்ணைகளிலிருந்த சுமார் 2,000 பன்றிகள் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் (ASF) பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 13 அன்று, ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் (ASF) பாதிக்கப்பட்ட மொத்தம் 273 பன்றிகள் அழிக்கப்பட்டன. பல நாட்களுக்குப் பிறகு, நெகிரி செம்பிலான் கால்நடை சேவைகள் துறை (JPVNS) 19 பண்ணைகளில் சோதனை நடத்தியது ஆனால் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பன்றிகள் காணவில்லை.
“இருப்பினும், அனைத்து பன்றிகளும் அழிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை,” என்று அவர் கூறினார்.
19 சட்டவிரோத பண்ணைகள் சம்பந்தப்பட்ட முக்கிய வழிகளில் தமது துறை JPVNS சோதனைகளை மேற்கொண்டதாக பக்ரி கூறினார்.
இது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பன்றிகளை சந்தை விலைக்குக் குறைவாக விற்க முயன்றால், ஜேபிவிஎன்எஸ் அல்லது மாநில அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்குமாறும் பக்ரி பொதுமக்களை வலியுறுத்தினார்.
ஏப்ரல் 9 அன்று போர்ட்டிக்சனில் உள்ள கம்போங் பாரு, தானா மேரா சைட் ஏ இல் உள்ள ஒரு பண்ணையில் ASF கண்டறியப்பட்டதை JPVNS உறுதிப்படுத்தியதாகவும், ஏப்ரல் 13 ஆம் தேதி 273 ASF-பாதிக்கப்பட்ட பன்றிகளை அழிப்பதற்கான செலவு RM20,000 என்றும் ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.















