மூன்று வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் ஒருவர் பலி!

பாப்பார், ஏப்ரல் 25 :

ஜாலான் கம்போங் சிம்புடு என்ற இடத்தில், இன்று காலை மூன்று வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

காலை 7 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், விபத்தில் சிக்கிய ஸ்டெட்னியஸ் முன்சின் (30) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் ரோஸ்லி ஜூன் கூறுகையில், காலை 7.16 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது, அதனைத்தொடர்ந்து தமது தீயணைப்பு நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு உறுப்பினர்கள் குழு விரைந்தது.

“நாங்கள் அந்த இடத்திற்கு வந்தவுடன், இரண்டு மிட்சுபிஷி டிரைடன் வாகனங்கள் மற்றும் 10 டன் லோரி சம்பந்தப்பட்ட விபத்தில் சிக்கிய ஒருவர் பலியானார். பாதிக்கப்பட்டவர் மிட்சுபிஷி டிரைடன் ஒன்றில் சிக்கிக் கொண்டார்,” என்று அவர் கூறினார்.

மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி நடவடிக்கைக் குழு பாதிக்கப்பட்டவரை வெளியே அகற்றியது மற்றும் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவரின் உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மீட்பு நடவடிக்கை 8.28 மணியளவில் முழுமையாக முடிவடைந்தது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here