இரவு நேர கேளிக்கை விடுதிகள் இயங்க பச்சை கொடி

இரவு நேர கேளிக்கை  விடுதிகளுக்கு இறுதியாக வணிகத்தை மீண்டும் தொடங்க பச்சை கொடி வழங்கப்பட்டுள்ளது. செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் எதிர்மறை பட்டியலில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் மே 15 முதல் அனுமதிக்கப்படும் என்றார்.

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடங்கியதில் இருந்து இரவு விடுதிகள், சமூக இடைவெளி தொலைவு தேவைகள் காரணமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை.

இந்த மாதம் நாடு கோவிட்-19 இறுதி கட்டத்திற்கு மாறிய பிறகு, இரவு விடுதிகள் எதிர்மறைய பட்டியலில் வைக்கப்பட்டிருந்தன. ஏனெனில் அவை “அதிக ஆபத்து” என்று கருதப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here