தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட சந்தேகநபர் காணாமல் போனது தொடர்பில் 6 போலீசார் கைது!

ஜார்ஜ் டவுன், ஏப்ரல் 27 :

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 26) பாயான் பாரு போலீஸ் லாக்கப்பில் இருந்து போதைப்பொருள் சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றதையடுத்து, ஆறு போலீஸ்காரர்கள் கைது செய்து, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பினாங்கு காவல்துறையின் தலைமை ஆணையர் டத்தோ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் இதுபற்றிக் கூறுக்கையில், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை எளிதாக்குவதற்காக காவல்துறை அதிகாரிகளை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்குமாறு கூறினார்.

சந்தேக நபரான அசிசி முகமட் ஹசான், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி கைது செய்யப்பட்ட பின்னர், பாயான் பாரு லாக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று முகமட் ஷுஹைலி தெரிவித்தார்.

அதன் பின்னர், கைது செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர்கள் கடமையிலிருந்த போது, “சந்தேக நபர் காணாமல் போனதை” போலீஸ் கண்டறிந்தது.

தனது பணியாளர்கள் அல்லது அதிகாரிகள் தங்கள் கடமையை புறக்கணித்ததாகக் கண்டறியப்பட்டால் அவர்களுடன் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று அவர் கூறினார்.

காவலில் உள்ள ஒருவரை தப்பிக்க அனுமதிப்பதில் அரசு ஊழியர் அலட்சியமாக செயல்பட்டதற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 223 மற்றும் காவலில் இருந்து தப்பியதற்காக தண்டனைச் சட்டம் பிரிவு 224 ஆகியவற்றின் கீழ் வழக்கு விசாரிக்கப்படும் என்றார்.

தடுப்புக் காவலிலிருந்து தப்பியோடிய சந்தேக நபரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு முகமட் ஷுஹைலி பொதுமக்களை வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here