வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்; 7 பேர் காயம்

ஈப்போ, சித்தியவானில் உள்ள கம்போங் கயானில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். ஏழு பேர் காயமடைந்தனர்.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,  சம்பவம் குறித்து சித்தியவான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்துக்கு அழைப்பு வந்தது.  விபத்தில் இரண்டு வகையான வாகனங்கள், அதாவது புரோட்டான் பெர்சோனா கார் மற்றும் நான்கு சக்கர டிரைவ் டொயோட்டா ஹிலக்ஸ் ஆகியவை மோதின.

விபத்தால் நான்கு பேர் பாதிக்கப்பட்டனர். அதாவது புரோட்டான் பெர்சோனா காரில் பயணித்த ஒரு ஆண் மற்றும் இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். அதே நேரத்தில் காரில் பயணித்த ஒருவர் சம்பவத்தில் இறந்தார் என்று அவர் கூறினார்.

நான்கு சக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் காயமடைந்துள்ளதாக பேச்சாளர் கூறினார். பாதிக்கப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைக்காக மஞ்சோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்  அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here