போலி MyPR வைத்திருந்த இந்தோனேசியருக்கு சிறை, அபராதம்

பாலிக் பூலாவ்:

போலி மலேசிய நிரந்தர குடியுரிமை (MyPR) வைத்திருந்த மற்றும் பயன்படுத்தியதற்காக இந்தோனேசிய தொழிலாளிக்கு, 10 மாத சிறைத்தண்டனை விதித்து இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

நீதிபதி அஹ்சல் ஃபாரிஸ் அஹ்மத் கைருடின் முன்னிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட 49 வயதான சுர்தி என்பவருக்கு RM10,000 அபராதம் அவர் விதித்தார். மேலும் அபராதத்தை செலுத்த தவறினால், அவர் மேலும் 12 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

கடந்த புதன்கிழமை (நவம்பர் 8) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பாயான் லெப்பாஸில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மட்னாசன் டிமருக்கு வழங்கப்பட்ட போலியான (MyPR) வைத்திருந்தது மற்றும் பயன்படுத்தியதாக சுர்தி குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here