மீன்பிடி படகு தீப்பிடித்தது; 24 மீனவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்

லங்காவி, மே 1 :

நேற்றிரவு இங்குள்ள பூலாவ் பியோங் கடற்பரப்பில், மீனவர்களை ஏற்றிச் சென்ற இழுவை படகு ஒன்று தீப்பிடித்ததையடுத்து, மொத்தம் 24 மீனவர்கள் மிக பதட்டமான தருணங்களை எதிர்கொண்டனர்.

இரவு 7.30 மணியளவில் நடந்த சம்பவத்தின்போது, சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த மற்றய படகுகள் மற்றும் மீனவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மீனவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.

லங்காவி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஷரிமான் ஆஷாரி இதுபற்றிக் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் எவருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்றார்.

“KH 455 என்ற படகு தீவிபத்துக்குள்ளானது பற்றிய தகவல், கடல்சார் நடவடிக்கை போலீஸ் தலைமையகத்தின் (PPM) பிராந்தியம் 1 லங்காவியின் கட்டளை அதிகாரியால் அனுப்பப்பட்டது என்றார்.

மீட்கப்பட்டவர்கள் அனைவரும் கடல்சார் அமுலாக்க போலிசார் மூலம் புக்கிட் மாலூட்டில் உள்ள தளத்திற்கு கொண்டு வரப்பட்டதாக ஷரிமான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here