முக்கிய நெடுஞ்சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல்- மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்

கோலாலம்பூர், மே 5 :

அய்டில்ஃபிட்ரி கொண்டாட்டத்தின் நான்காவது நாளான இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து முக்கிய நெடுஞ்சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தலைநகருக்கு 6.1 கிலோமீட்டர் தொலைவிலும், லெந்தாங்கிற்கு 8.7 கிமீ தொலைவிலும் உள்ள பெந்தோங் டோல் பிளாசாவிற்குப் பின்னருள்ள சாலையின் இரு திசைகளிலும், அதிக போக்குவரத்து நெரிசல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் (LLM) அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தெற்கு நோக்கி செல்லும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் (பிளஸ்) போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாக உள்ளது, அதாவது சிம்பாங் ரெங்கம் முதல் செடெனாக் மற்றும் செடெனாக் முதல் ஹெந்தியான் கூலாய் வரை, அத்துடன் ஹெந்தியான் கூலாயிலிருந்து செடெனாக் வரை மெதுவாகவும், ஹெந்தியா டாங்காக்கிற்குப் பிறகு ஜாசின் மற்றும் அயிர் கெரோஹ் வரை மெதுவாகவும் வாகனங்கள் நகருகின்றன.

இதற்கிடையில், சிங்கப்பூரிலிருந்து மலேசியா நோக்கியா சாலையில், அதாவது சுல்தான் இஸ்கந்தர் கட்டிடத்தின் குடிநுழைவு, சுங்க மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வளாகத்தின் (CIQ) நுழைவாயிலுக்கு அருகில் உள்ள ஜோகூர் காஸ்வேயில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here