நரம்பு பிரச்சினையால் வங்கி வேலையை இழந்தாலும் விடாமுயற்சியால் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பாலமுருகன்

முப்பத்தெட்டு வயதான பால முருகன் பரணி குமார் தினமும் காலையில் அம்மாவும் பாட்டியும் கோலம் போடுவதைப் பார்த்து வளர்ந்தவர். நீண்ட காலத்திற்கு முன்பே அவர் இந்த பாரம்பரிய கலை வடிவத்தை நேசித்து தனது சொந்த வடிவமைப்புகளை உருவாக்கத் தொடங்கினார்.

ஒரு வருடத்திற்கு முன்பு நரம்பு சம்பந்தமான உடல்நலப் பிரச்சினை கண்டறியப்பட்டதால் வங்கி வேலையை கைவிட  வேண்டிய கட்டாயத்தில் இருந்த பாலா, கோலம் போடுவதில் தனது ஆர்வத்தைத் தொடர வீட்டில் இருந்த நேரத்தைப் பயன்படுத்தினார்.

பின்னர் அவர் மலேசிய சாதனை புத்தகத்தில் தன் பெயர் இடம்பெற வேண்டும் என்று நினைக்க் தொடங்கினார். பல மாதங்கள் பயிற்சிக்குப் பிறகு, பாலா தனது நுட்பத்தையும் வேகத்தையும் கச்சிதமாகச் செய்து, 10 மணி நேரத்தில் 36  அதிக கோலங்கள் போட்டதற்காக மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here