எரிவாயு தோம்பு வெடித்ததில் நால்வர் காயம்; 6 வயது குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது

நிபோங் தேபால், மே 9 :

நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில், இங்குள்ள தாமான் சென்டேராவாசியில் உள்ள அவர்களது வீட்டில், சமையல் எரிவாயு தோம்பு வெடித்ததில், அக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் ஆறு வயதுக் குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது.

மாநில சுற்றுச்சூழல் மற்றும் நலன்புரி குழுவின் தலைவர் பீ பூன் போ கூறுகையில், வெளியே இருந்து வீட்டுக்கு திரும்பி, கதவைத் திறக்கும்போது வெடிவிபத்து ஏற்பட்டது.

“வெடிப்பைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஐந்து பேரும் காயமடைந்து சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு (HPP) கொண்டு செல்லப்பட்டனர்.

“அவர்களுள் ஆறு வயது குழந்தைக்கு கடுமையான காயங்கள் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) இருப்பதாக அறிவிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பூன் போ, இன்று காலை செபெராங் பிறை செலாத்தான் மாவட்ட சமூக நலத் துறை நடத்திய ஆய்வின் விளைவாக, இந்த வெடிப்புச் சம்பவத்தில் நான்கு வீடுகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

“இந்த சம்பவத்தில் மதிப்பிடப்பட்ட இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் மேலும் பாதிக்கப்பட்ட அனைவரிடமிருந்தும் காவல்துறை அறிக்கை பெறும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here