டிரம்பின் டுவிட்டர் மீதான தடை திரும்பப் பெறப்படும் – எலான் மாஸ்க்

வாஷிங்டன், மே 11 :

அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி நடந்த வன்முறையைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், அவருடைய டுவிட்டர் உள்பட தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக 70,000க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, டுவிட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டுவிட்டரை பயன்படுத்த டொனால்ட் டிரம்பிற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனக்கூறி இருந்தார். இதனால் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் டுவிட்டரை பயன்படுத்த முடியாத நிலை தொடர்ந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் மீதான தடை திரும்பப் பெறப்படும் என டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here