நாட்டில் ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் வெப்பநிலை மற்றும் புகை மூட்டம் அதிகரிக்கலாம்- மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்

கோலாலம்பூர், மே 12 :

நாட்டில் எதிர்வரும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை வெப்பநிலை மற்றும் புகை மூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் இயக்குநர் ஜெனரல் முஹமட் ஹெல்மி அப்துல்லா கூறுகையில், பிலிப்பைன்ஸ் போன்ற அருகிலுள்ள நாடுகளில் வெப்பமண்டல புயல்கள் போன்ற வெளிப்புற காரணிகளின் தாக்கம் காரணமாக தீபகற்பத்தில் வறண்ட சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும்.

மேலும் “இந்தோனேசியாவில், வறண்ட வானிலை அதிகமாக இருப்பதால் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்புள்ளது, மேலும் தென்மேற்கில் இருந்து காற்று மூடுபுகையை நம் நாட்டிற்கு வரும்” என்று இன்று பெர்னாமாடிவி வெளியிட்ட “மலேசியா பெத்தாங் இனி” நிகழ்ச்சி மூலம் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here