ஷா ஆலம்: சிலாங்கூர் முழுவதும் மொத்தம் 6,748 கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) வழக்குகள் பதிவாகியுள்ளன, வாராந்திர வழக்குகளின் எண்ணிக்கை மே 7 வரை எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளது என்று மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஷாரி ங்காடிமான் தெரிவித்தார்.
அவர்களில் நான்கு சதவீதம் பேர் மேலதிக கண்காணிப்பிற்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும், மீதமுள்ளவர்கள் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றதாகவும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், 118 HFMD கிளஸ்டர்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 95% நர்சரிகள் அல்லது பகல்நேர பராமரிப்பு மையங்களில் உள்ள கிளஸ்டர்களை உள்ளடக்கியதாகப் பதிவாகியுள்ளது. இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, மாநிலத்தில் இந்த நோயின் அதிகரித்துவரும் போக்கு முக்கியமாக ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஏற்பட்டுள்ளது என்று டாக்டர் ஷாரி கூறினார்.
தொற்று வழக்குகளில் 33% coxsackie வைரஸ் A16 (CA16) மற்றும் 22% என்டோவைரஸ் 71 (EV 71) மூலம் ஏற்படுகிறது, மற்றவை மற்ற வகை வைரஸ்கள் என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு 18 வது எபிட் வாரத்தில் (ME 18) மொத்தம் 525 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் முந்தைய ME உடன் ஒப்பிடும்போது 40 % குறைந்துள்ளது என்று டாக்டர் ஷாரி கூறினார்.
ஹரிராயா விடுமுறையின் காரணமாக இந்த குறைவு ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலான பராமரிப்பு மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அதே நேரத்தில், அந்த காலகட்டத்தில் எச்.எஃப்.எம்.டி கிளஸ்டர்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அவர் கூறினார்.









