பந்தயம் மற்றும் ஆபத்தான வகையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 11 ஓட்டுநர்கள் கைது!

கோலாலம்பூர், மே 14 :

நெகிரி செம்பிலானின் சிரம்பானில் உள்ள பல இடங்களில், இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 2 இந்தோனேசியர்கள் உட்பட 11 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர்.

17 முதல் 21 வயதுடைய ஆண்கள் அனைவரும் புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை (JSPT) குழுவினரால் தடுத்து வைக்கப்பட்டனர், அவர்கள் வடக்கு – தெற்கு விரைவுச்சாலை (பிளஸ்) மற்றும் காஜாங் சிரம்பான் எக்ஸ்பிரஸ்வே (லெகாஸ்) ஆகியவற்றில் மேற்கொண்ட தெருக் குண்டரகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டனர்.

இன்று இரவு 11 மணி முதல் காலை 9 மணி வரை, 21 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக புக்கிட் அமான் JSPT துணை இயக்குநர் டத்தோ முகமட் நட்ஸ்ரி ஹுசைன் தெரிவித்தார்.

“Lebuhraya Plus இல் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் போது, ​​கோலாலம்பூரை நோக்கிய கிலோமீட்டர் 269.8 இலிருந்து KM271 வரை ‘சூப்பர்மேன்’ மற்றும் ‘ஜிக் ஜாக்’ ஆகிய சாகச செயல்களைச் செய்துகொண்டு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் போட்டியில் பயணிப்பதைக் குழு கண்டது.

“அதிகாலை 1.40 மணியளவில் சிரம்பான் ஆர்&ஆர் பகுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டபோது இரு ரைடர்களையும் பின்தொடர்ந்த குழு அவர்களைத் தடுத்து நிறுத்தியது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அதே நடவடிக்கையில், சிரம்பான் நோக்கி 37.6 கிலோமீட்டர் முதல் 43 கிலோமீட்டர் அதாவது லெகாஸ் வரை பந்தயத்தில் ஈடுபட்,டு ஆபத்தான செயல்களில் ஈடுபட்ட நான்கு பேரையும் உறுப்பினர்கள் கைது செய்தனர்.

அவரது கூற்றுப்படி, அனைத்து சந்தேக நபர்களும் சிரம்பானின் ஜாலான் கேஎல்எஸ் 2 தாமான் ஸ்ரீ பரோய் வாகன நிறுத்துமிடத்திலும், ஜாலான் லாவெண்டர் ஹைட்ஸ் வளாகத்தின் பின்புறமும் அதிகாலை 2.10 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

“அதிகாலை 2.30 மணியளவில், சிரம்பானில் உள்ள ஜாலான் ரசாஹ் ப்ரிமாவில், KM263 இலிருந்து KM258 வரையிலான பிளஸ் நெடுஞ்சாலையில் ஆபத்தான செயல்களைச் செய்து, ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டறிந்த பின்னர், அவர்களது குழு மேலும் ஐந்து பேரைக் கைது செய்தது,” என்று அவர் கூறினார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 இன் பிரிவு 42 இன் படி தடுத்து வைக்கப்பட்ட அனைவரும் விசாரிக்கப்பட்டு மொத்தம் 36 சம்மன்கள் விதிக்கப்பட்ட்க அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here