வெளிநாட்டுத் தோட்டத் தொழிலாளி ஒருவர், அவரது நண்பரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது

பெக்கான், மே 17 :

கம்போங் செமாங்காட் அருகே உள்ள கன்சோங் தோட்டத் தொழிலாளர் வீட்டுப் பகுதியில், வெளிநாட்டுத் தோட்டத் தொழிலாளி ஒருவர், அவரது நண்பரால் வெட்டப்பட்டதாக நம்பப்படும் சடலம் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டது.

காலை 10.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டவர் செலாமாட் என அழைக்கப்படும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் மற்றும் சுமார் 45 வயதுடையவர் என்றும் அடையாளம் காணப்பட்டது.

மாவட்ட காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் முகமட் சாய்டி மாட் ஜின் கூறுகையில், அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட தகராறில் ஒரு காது உடைந்ததைத் தவிர, உடலின் பல பாகங்களில் காயங்களுடன் பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டதாக கூறினார்.

அவரது கூற்றுப்படி, சம்பவத்தைத் தொடர்ந்து, குவாந்தானின் கம்போங் உபைக்கு அருகிலுள்ள 26ஆவது கிலோமீட்டரில் ஜாலான் பெக்கான்-குவாந்தானில் சாலையோரம், நண்பரை வெட்ட பயன்படுத்திய ஆயுதத்துடன் டோனி, 32 என அழைக்கப்படும் சண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் சந்தேக நபரை போலீஸார் கைது செய்தனர்.

“முதற்கட்ட விசாரணையின் விளைவாக, இறந்தவரின் சகோதரரான சாட்சி ஒருவரின் சாட்சியத்தின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர் அருகிலுள்ள கழிவறைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறினார், மேலும் சந்தேக நபர் ஒரு கத்தியை எடுத்துச் சென்று திடீரென கோபத்துடன் காணப்பட்டார்.

“சந்தேக நபர், பாதிக்கப்பட்டவர் வசித்த பகிர்ந்த வீட்டில் இருந்து 50 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள உள்ள பற்றுமொரு பகிரப்பட்ட வீட்டில் வசிக்கிறார்.

“சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை கத்தியால் குத்திவிட்டு, முழங்கைகள், தோள்கள், கழுத்து, நெற்றி, தலையின் பின்புறம் மற்றும் காதுகள் உட்பட உடலின் பல பாகங்களைத் தாக்கிவிட்டு தப்பியோடினார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், பலத்த காயம் காரணமாக பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று ஜைதி கூறினார்.

ஆரம்பகட்ட விசாரணையில், சம்பவத்திற்கு முன்னதாக அதிகாலை 2 மணியளவில், சந்தேக நபர் ஒரு கத்தியுடன் பகிரப்பட்ட வீட்டின் பின்னால் நடமாடுவதைக் கண்டதாக சாட்சி கூறியதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here