துவாரான், மே 18 :
ஜாலான் கியுலு – ரொண்டோகுங் வழியாக ரானாவ் நோக்கி செல்லும் பொதுமக்கள், நேற்று, இங்குள்ள கம்போங் லோகோஸ் மற்றும் கம்போங் பாஹூ, கியுலுவை இணைக்கும் சாலையில் பாறை சரிந்ததை அடுத்து, ஜாலான் தம்பருலி – ரானாவ் வழியாக மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
துவாரன் பொதுப்பணித் துறை (ஜேகேஆர்) மாவட்டப் பொறியாளர் ஃபரினி அவாங் கூறுகையில், ஜாலான் புகாக் – பாஹூ – நுலுவின் 19.2 ஆவது கிலோமீட்டரில் பாறை சரிவு ஏற்படத்தை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு 12 மணிக்கு அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டது என்றார்.
கடந்த மே 13 அன்று, வீதியின் ஒரு திசை மூடப்படுவதற்கு முன்னர் தொடர் மழையின் பின்னர் சாலையின் ஓரத்தில் சிறிய நிலச்சரிவு ஏற்பட்டதாக அவர் கூறினார்.
“நேற்று மாலை 5 மணியளவில், அதே இடத்தில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது, இதனால் சாலைப்பயனர்களின் பாதுகாப்பு காரணமாக இரு திசைகளும் மூடப்பட்டன,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.