கோவிட் தொற்றின் நேற்றைய பாதிப்பு 2,017; இறப்பு 7

கோவிட் -19 தொற்று நேற்று 2,017 என பதிவாகியுள்ளன. மொத்த தொற்றுகள் 4,483,295 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள தொற்றுகள் தற்போது 29,971 ஆக உள்ளது.

நேற்று மேலும் ஏழு இறப்புகள் பதிவு செய்யப்பட்டன. அதில் மூன்று பேர் “மருத்துவமனைக்கு வெளியே இறந்தவர்கள்” என்று அறிவிக்கப்பட்டனர். தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, மொத்தம் 35,630 இறப்புகள் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here