நெல் அறுவடைக் காலத்திற்குக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு மாதாந்தம் 200 வெள்ளி நிதி உதவி – பிரதமர் தெரிவிப்பு

கோலாலம்பூர், மே 19:

அறுவடைக் காலத்திற்குக் காத்திருக்கும் நெல் விவசாயிகளுக்கு, அதாவது ஆறு மாத காலத்திற்கு 200 வெள்ளி நிதி உதவி வழங்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

​​இந்த உதவி நிதி அமைச்சகத்துடன் விவாதிக்கப்பட்டு, அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சேர்க்கப்படும் என்றும் அவர் இன்று தெரிவித்தார்.

“இரண்டு பருவங்களுக்கு தலா மூன்று மாதங்களுக்கு மொத்தம் RM200 வழங்கப்படும், அதாவது ஆறு மாதங்கள் நெல் அறுவடைக்கு காத்திருக்கும் போது இந்த உதவித்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும் ” என்று விவசாயிகள் அமைப்பின் (NAFAS) 48 வது ஆண்டு பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கு முன் நடந்த, இரவு விருந்தில் கலந்து கொண்ட போது பிரதமர் தனது உரையில் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ரொனால்ட் கியாண்டி மற்றும் NAFAS இயக்குநர்கள் குழுவின் தலைவர் டத்தோ ஜம்ரி யாகோப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here