திரெங்கானுவில் 1,000 அம்னோ தலைவர்களுடன் நடந்த அய்டில்ஃபித்ரி கொண்டாட்டத்தில் பிரதமர்!

கோல திரெங்கானு, மே 20 :

1,000 திரெங்கானு அம்னோ தலைவர்களுடன் கொண்டாடப்பட்ட அம்னோ கட்சியின் அய்டில்ஃபித்ரி திறந்த இல்லத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களுடன் சந்தோசமாக கலந்து கொண்டார்.

இஸ்மாயில் சப்ரி, மாநில UMNO இணைப்புக் குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மட் சாட் உடன் மாலை 3.45 மணியளவில் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்விற்கு வந்தார்.

அம்னோ உச்ச கவுன்சில் (SC) உறுப்பினர்களான டத்தோஸ்ரீ தாஜூடின் அப்துல் ரஹ்மான் மற்றும் பெசூட்டின் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உணவு உண்பதைத் தவிர, விருந்தினர்கள் அனைவருடனும் நட்பாக இருந்த பிரதமர், ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நிகழ்வின் கலகலப்பானது UMNO திரெங்கானுவின் வலுவான ஒற்றுமையை நிரூபித்தது என்று பிரதமர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here