Botak Chin குற்றவாளியை கைது செய்யும் சிறப்பு குழுவில் இருந்த DSP காலமானார்

குற்றவாளிகளை வேட்டையாடுவதில் மிகவும் அனுபவம் வாய்ந்த  முன்னாள் மூத்த போலீஸ் அதிகாரியும், துணை கண்காணிப்பாளருமான (DSP) கென்னி ஜேம்ஸ் வுட்வொர்த் 89,மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் நேற்று காலமானார். கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தின் தீவிர குற்றப்பிரிவின் 12 காவல்துறை அதிகாரிகளில் கென்னியும் ஒருவர். அவர்கள் ‘Magnificient 12’ என்ற குழுவின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவராக  தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஒரு காலத்தில் மோசமான குற்றவாளியான வோங் ஸ்வீ சின் அல்லது Botak Chin என்று அழைக்கப்படும் குற்றவாளியை வேட்டையாடுவதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டது.

போலீஸ் படைத்தலைவர்  டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி மற்றும் துணை இன்ஸ்பெக்டர்-ஜெனரல் ஆஃப் போலீஸ் தாருக் ரஸாருதீன் ஹுசைன் மற்றும் ராயல் மலேசியா காவல்துறை (PDRM) உறுப்பினர்கள் அனைவரும் இறந்தவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இறந்தவரின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக இன்றும் நாளையும் காலை 9 மணி முதல் இரவு 9.30 மணி வரை கோலாலம்பூரில் உள்ள ஹோலி ஜெபமாலை தேவாலயத்தில் வைக்கப்படும்.

உண்மையில், அவரது சேவைகள் மற்றும் அர்ப்பணிப்பு எப்போதும் நினைவில் இருக்கும்.  மேலும் அவரது மறைவு காவல்துறைக்கும் நாட்டிற்கும் ஒரு பெரிய இழப்பு என்று PDRM முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here