அலோர் ஸ்டார், உத்தாரா மலேசியா பல்கலைக்கழக (UUM) மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் இறந்து கிடந்தார் என்று கெடா காவல்துறை தெரிவித்துள்ளது. குபாங் பாசு மாவட்ட காவல்துறைத் தலைவர் ரோட்ஸி அபு ஹாசன் கூறுகையில், காவல்துறை இந்த வழக்கை திடீர் மரணம் என்று வகைப்படுத்தியுள்ளது.
தடயவியல் அறிக்கை இன்னும் நிலுவையில் உள்ளதால், மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட மரணமா என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யவில்லை. இரண்டாம் ஆண்டு கணக்கியல் மாணவி வினோஷினி (21) திங்கள்கிழமை தனது விடுதி அறையில் இறந்து கிடந்தார். யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில், அவர் மின்சாரம் தாக்கி இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் வினோஷினியின் குடும்பத்தினருக்கு UUM தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. அலோர் ஸ்டார் சுல்தானா பஹியா மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக அவர்கள் இன்னும் காத்திருப்பதாக UUM கூறியது. குடும்பத்திற்கு தகுந்த உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் சுமையை குறைக்கும் என்று UUM ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.