தலைநகரைச் சுற்றியுள்ள பல சாலைகள் திடீர் வெள்ளத்தால் பாதிப்பு

கோலாலம்பூர், மே 25 :

இன்று அதிகாலை முதல் பெய்துவரும் கனமழையால் தலைநகரைச் சுற்றியுள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சம்பந்தப்பட்ட சாலைகளில் ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா, கம்போங் பாரு மற்றும் ஜாலான் அம்பாங் ஆகியவை அடங்கும்.

ரோயல் மலேசியன் போலீஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இன்று நண்பகல் 1.25 மணி நிலவரப்படி, அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது.

“அவற்றில் ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில், தண்ணீர் கணுக்கால் மட்டத்திற்கு உயர்ந்தது, ஆனால் இப்போது அது குறைந்துவிட்டது என்றும் அனைத்து வாகனங்களுக்கும் சாலை திறக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கம்போங் பேரிக், லோரோங் ராஜா மகாதி மற்றும் ஜாலான் அம்பாங் ஆகிய இடங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் அனைத்து வழிகளும் தற்போது முழுமையாக மீட்கப்பட்டுள்ளன,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here