போக்குவரத்து விளக்கு அருகில் முரளி சண்முகம் சுட்டுக் கொலை

சுங்கைப்பட்டாணி, தாமான் இந்தான் போக்குவரத்து விளக்கு அருகில்  சுடப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார். அந்த நபர் புக்கிட் செலம்பாவைச் சேர்ந்த முரளி சண்முகம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். புதன்கிழமை (மே 25) மதியம் 12.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் அவரது மனைவி, மகன் மற்றும் நண்பர் காயமின்றி உயிர் தப்பினர்.

சைனா பிரஸ் கூற்றுபடி, அவர் அங்குள்ள காபி கடை ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு காரில் புறப்படவிருந்தபோது முகமூடி அணிந்த நான்கு பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் அவரை நோக்கி வந்தனர்.

அப்போது முகமூடி அணிந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி தலையில் துப்பாக்கியால் சுட்டார். அவர்கள் அனைவரும் முகமூடிகள் மற்றும் கையுறைகளை அணிந்திருந்ததால், தாக்குதல் நடத்தியவர்களைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை என்று சாட்சி ஒருவர் கூறினார்.

யாரோ பட்டாசு வெடித்ததாக நாங்கள் நினைத்தோம். நாங்கள் சோதனையிட வெளியே சென்றபோதுதான் அது துப்பாக்கிச் சூடு என்பதை உணர்ந்தோம்.

பாதிக்கப்பட்டவர் காபி கடைக்கு வழக்கமாக வருபவர். அவர் ஒவ்வொரு வாரமும் தனது குடும்பத்துடன் மதிய உணவுக்காக இங்கு வருவார் என்று அவர் கூறினார். இதையடுத்து விசாரணைக்காக காபி கடை நடத்துனரை தற்காலிகமாக மூடுமாறு போலீசார் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here