கடலில் குளிக்கும்போது காணாமல் போனதாக தேடப்பட்ட பெண்ணின் சடலம் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டது

கேமாமன், மே 25 :

கடந்த வெள்ளிக்கிழமை,பந்தாய் பென்ஞ்சுக்கில் கணவனும் மனைவியும் குளித்தபோது காணாமல் போயிருந்ததாக தேடப்பட்ட பெண்ணின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

அதேநேரம் அவரது கணவர் அஹ்மத் கரீப்பின் உடல், காணாமல் போன அதே நாள் பிற்பகல் 2.10 மணியளவில் கோலா கேமாமனில் இருந்து சுமார் இரண்டு கடல் மைல் தொலைவில் இரண்டு மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டது,

கேமாமன் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஹன்யன் ரம்லான் கூறுகையில், ரோகியா அப்துல் ரஹ்மான், 59, என்ற அந்தப் பெண்ணின் சடலம், சம்பவ இடத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூலாவ் தெங்கோல், டுங்கூன் அருகே உள்ள பந்தாய் ஆயிர் தாவாரில் இரவு 7.30 மணியளவில் மிதந்து கொண்டிருக்க கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் “பெண்ணின் உடல் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினரால், பொதுமக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டு, இன்று அதிகாலை 3 மணியளவில் கோலா கேமாமன் படகுத்துறைக்கு வந்தடைந்தது.

வெள்ளிக்கிழமை காலை நடந்த சம்பவத்தில், பஹாங்கின் தெமெர்லோவைச் சேர்ந்த ரோகியா மற்றும் அவரது கணவர் விடுமுறைக்காக தங்கள் நான்கு குழந்தைகளுடன் கடற்கரைக்கு வந்தனர், கணவனும் மனைவியும் அங்குள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, தம்பதியினர் வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here