திடீரென தீப்பிடித்த சுற்றுலா பேருந்து; பயணிகளும் ஓட்டுநரும் பாதுக்காப்பாக உள்ளனர்

சிரம்பான், மே 26 :

இங்குள்ள நீலாய் அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (பிளஸ்) வடக்கு நோக்கிச் செல்லும் சாலையின் 279.3 ஆவது கிலோமீட்டரில் நேற்று, என்ஜின் சேதமடைந்ததால் ஒரு சுற்றுலா பேருந்து தீப்பிடித்தது.

நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ஃபாஸ்லி அப்துல் ரஹ்மான் கூறுகையில், இந்த சம்பவம் மாலை 4 மணியளவில் சிரம்பானில் இருந்து பண்டார் தாசிக் செலாத்தானுக்கு சென்று கொண்டிருந்த போது நடந்ததாக கூறினார்.

“சுற்றுலா பேருந்து இயந்திரம் சேதமடைந்து தீப்பிடித்தது. இருப்பினும், ஐந்து பயணிகளும் பேருந்து ஓட்டுநரும் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ எதுவும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை.

“சிரம்பான் 2 தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்புப் படையினரால் தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது, மேலும் பேருந்து 90 சதவீதம் தீப்பிடித்து எறிந்துள்ளது” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தால் ஒன்பது கிலோமீட்டர் தூரத்துக்கு வாகன நெரிசல் ஏற்பட்டதாக முகமட் ஃபாஸ்லி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here