மரம் விழுந்ததில் சிக்கிய பெண் ஓட்டுநருக்கு கால் முறிந்தது

 புக்கிட் பிந்தாங்,  ஜாலான் ராஜா சூலானில் இன்று மதியம் கார் மீது மரம் விழுந்ததில் ஒரு பெண்ணின் கால் முறிந்தது. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு இயக்குநர் சந்திர சேகரன் காந்தி கூறுகையில், மாலை 5.42 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், சம்பவ இடத்திற்கு இரண்டு மீட்புப் பிரிவுகள் குவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது காரில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த 12 பேர் அடங்கிய மீட்புப் பணி இரவு 7.11 மணிக்கு நிறைவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here