அனாக் புக்கிட் ஆற்றின் நீர் மட்டம் எச்சரிக்கை அளவை தாண்டியுள்ளது

அலோர் ஸ்டார், அக்டோபர் 8:

இன்று காலை பதிவாகியிருந்த 1.96 மீட்டருடன் ஒப்பிடும்போது, தாமான் அமானில் உள்ள சுங்கை அனாக் புக்கிட் ஆற்றின் நீர் மட்டம் அதன் எச்சரிக்கை அளவை விட 2.03 மீட்டர் அதிகமான நீர் கொள்ளளவைக் கொண்டுள்ளது.

கோத்தா ஸ்டார் மாவட்ட குடிமைத் தற்காப்பு அதிகாரி கேப்டன் (PA) நார்லிசாவதி இஸ்மாயில் கூறுகையில், இன்று இரவு 7.35 மணி நிலவரப்படி, TAR பாலத்தில் உள்ள அனாக் புக்கிட் ஆற்றில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் விளைவாக, ஆற்றின் நீர்மட்டம் 1.30 மீட்டராகவும், கெடா ஆற்றின் நீர் மட்டம் 1.11 மீட்டராகவும் இருந்தது.

“இதுவரை ஆற்று நீர் மட்டத்தின் நிலை கட்டுக்குள் உள்ளது என்றும் ஆற்று நீர் மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில், வெள்ளப்பெருக்கிற்கு வாய்ப்புள்ளது என்றும் ஆற்று நீர் மட்டம் தொடர்பில் தொடர்ந்து கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

“இருப்பினும், எங்கள் உறுப்பினர்களின் கண்காணிப்பு முடிவுகள் அடிப்படையில், ஆற்று நீரின் போக்கு குறைந்து வருவதைக் கண்டறிந்துள்ளது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here