சரவாக்கில் இணைய மோசடி வழக்குகள் சடுதியாக அதிகரிப்பு

கூச்சிங், மே 28 :

சரவாக்கில் பதிவான இணைய மோசடி வழக்குகள் கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவு செய்யப்பட்ட 640 வழக்குகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 666 வழக்குகளாக அதிகரித்துள்ளது.

மாக்காவ் ஊழல், காதல் மோசடி மற்றும் கடன் தருவதாக கூறி மோசடி போன்ற மோசடி கும்பல்களால் பாதிக்கப்பட்டவர்களில் நடுத்தர வர்க்கத்தினர், ஓய்வு பெற்றவர்கள், பணிபுரியும் பெண்கள், உயர் அந்தஸ்தில் உள்ளவர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் என விதிவிலக்கின்றி எல்லா தரப்பினரும் இந்த மோசடிகளில் சிக்குகின்றனர் என்று சரவாக் காவல்துறை ஆணையர் டத்தோ முகமட் அஸ்மான் அஹ்மட் சப்ரி தெரிவித்தார்.

” சரவாக்கில் வணிகக் குற்றங்களால் ஏற்பட்ட இழப்புகள் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மொத்தம் RM17.8 மில்லியனாக இருந்தது, ஆனால் இது 2021 இல் RM15.3 மில்லியனாக இருந்தது, இது RM2.5 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று இங்குள்ள தாமான் மலிஹாவில் சமூகக் காவல் திட்டத்தை நடைமுறைபடுத்தும்போது அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here