கிள்ளான், மே 30 :
நேற்றிரவு பல்நோக்கு வாகனம் ( MPV) ஒன்று ஆற்றில் விழுந்ததில் ஏழு பேர் காயமடைந்தனர்.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோரஸாம் காமிஸைத் தொடர்பு கொண்டபோது, ஜாலான் ஹாஜி அப்துல் மனன் போக்குவரத்து விளக்குக்கு அருகில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறினார்.
“பல்நோக்கு வாகனம் ஆற்றில் காணப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்ட இருவர் வாகனத்தின் முன்புறத்தில் சிக்கிக்கொண்திருந்தனர் என்றும் “காயமடைந்த ஏழு பேரில், இருவர் பலத்த காயங்களுக்கு ஆளாகினர் என்றும் கூறினார்.
“இன்று நள்ளிரவு 12.34 மணிக்கு மீட்புப் பணிகள் முடிவடைந்தன,” என்று அவர் இன்று
கூறினார்.









