சிலாங்கூரில் டிங்கி காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

புத்ராஜெயா, மே 31 :

மே 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான காலத்தில் சிலாங்கூரில் டிங்கி காய்ச்சல் வழக்குகள் 270 பேராக அதிகரித்துள்ளது. அதனால் சிலாங்கூரில் இந்தாண்டு பதிவான டிங்கி காய்ச்சல் வழக்குகளின் எண்ணிக்கை மொத்தம் 920 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 19ம் தேதி, மாநிலத்தில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 650 ஆக இருந்தது.

2021 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 10,597 ஆக இருந்த டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, இந்தாண்டு 16,145 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 5 இறப்புகளுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு டிங்கி காய்ச்சலால் 9 இறப்புகள் இதுவரை பதிவாகியுள்ளன என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டிங்கி காய்ச்சல் அதிகமாக உள்ள தற்போதைய சூழ்நிலையில், குடியிருப்பு வளாகங்கள் மற்றும் பணியிடங்களின் சுற்றுச்சூழலில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம், சமுதாயத்தின் ஒவ்வொரு தனிநபரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

“சமூகத்தில் உள்ள அதிகாரிகள் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கண்டறிந்து அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், வளர்ந்த கொசுக்களைக் கொல்ல வளாகத்தில் தடுப்புகள் மற்றும் ஏரோசல் ஸ்ப்ரே போன்ற தடுப்பு முறைகளைப் பயன்படுத்துகின்றனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here