கோலாலம்பூர்:
புத்ரா ஹைட்ஸ் நிலையத்தில் ஏற்பட்ட மின்தடைப் பழுது காரணமாக, கெளானா ஜெயா LRT ரயில் வழித்தடத்தில் இன்று காலை நீண்ட வரிசைகளும் பெரும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக Rapid KL நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புத்ரா ஹைட்ஸ் நிலையத்தில் ரயில்கள் கைமுறையாக இயக்கப்படுவதுடன், இதர நிலையங்களிலும் ரயில்களின் இயக்கம் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுப் பழுதுபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதோடு, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தக் காவல் துறையினரும் நிலைய அதிகாரிகளும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
பயணிகள் அனைவரும் ராபிட் கேஎல்-இன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளம் அல்லது MyRapid PULSE செயலி மூலம் தற்காலிகச் சேவைகள், தாமதங்கள் குறித்த உடனுக்குடனான தகவல்களைத் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
























