உத்தரா மலேசியா பல்கலைக்கழக (UUM) மாணவியான எஸ்.வினோஷினி குறித்து மாணவர்கள் பேசவோ அல்லது விவாதங்களில் கலந்து கொள்ளவோ தடை விதித்திருந்த உத்தரவை இன்று ரத்து செய்துள்ளதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது
ஒரு அறிக்கையில், ஒற்றுமை நிகழ்வுகள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் மாணவர்கள் தங்கள் செயல்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அது கூறியது. UUM துணைவேந்தர் (மாணவர் விவகாரங்கள்) அலுவலகத்தால் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட முந்தைய அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக சமீபத்திய அறிக்கை இருந்தது.
தடையை மீறும் மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழகம் அச்சுறுத்தியுள்ளதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.