தாவாவில் RM258,948 மதிப்புள்ள 7 கிலோ சியாபு வகை போதைப்பொருள் போலீசாரால் பறிமுதல்; ஒருவர் கைது

தாவாவ், மே 31 :

கடந்த புதன்கிழமை (மே.25) இங்கு நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளில், RM258,948 மதிப்புள்ள ஏழு கிலோகிராம் சியாபு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அதனுடன் தொடர்புடைய ஒரு உள்ளூர் நபரை போலீசார் கைது செய்தனர்.

தாவாவ் மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் ஜாஸ்மின் ஹுசின் கூறுகையில், 20 வயதுடைய சந்தேக நபர் ஜாலான் ஸ்டீபன் டானில் உள்ள ஒரு வளாகத்தில் பிற்பகல் 2.10 மணியளவில் கைது செய்யப்பட்டார், அதனைத்தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அன்று மாலை 3.40 மணிக்கு பத்து 3, ஜாலான் அபாஸில் உள்ள ஒரு கடையிலிருந்த ஒலிபெருக்கியில் இரண்டு பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போதைப்பொருள் கூரியர் சேவை மூலம் மாநிலத்திற்குள் கடத்தப்பட்டதாக நம்பப்படுவதாக அவர் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்காக சந்தேகநபர் ஜூன் 1 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here