கோத்தா பாரு, ஜூன் 4 :
பூ மற்றும் பூச்செடி வளர்ப்புத் தொழில், குறிப்பாக மலர் சந்தையில் அதிக கேள்வியைக் கொண்ட அதிக மதிப்புள்ள மலர்களில் ஒன்றான ஆர்க்கிட்கள் ஏற்றுமதி மூலமாக 2021 ஆம் ஆண்டில் RM417.3 மில்லியன் வருமானத்தை நாடு பதிவு செய்துள்ளது.
இந்த வருமானம் முந்தைய ஆண்டின் RM403.0 மில்லியனுடன் ஒப்பிடுகையில், அதிகரிப்பை காட்டுவதாக விவசாயம் மற்றும் உணவுத் தொழில் துணை அமைச்சர்I டத்தோஸ்ரீ அஹமட் ஹம்சா தெரிவித்துள்ளார்.
உலகளாவிய சந்தையில் பூ மற்றும் பூச்செடி வளர்ப்புத் தொழிலின் தேவை அதிகரித்து வருவதால், உள்ளூர் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து புதிய சந்தை வாய்ப்புகளை ஆராய்ந்து, அவற்றை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை நிச்சயமாக தமது துறை வழங்கும் என்றார்.
“இது தனிநபர் வருமானம் ஈட்டுவதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் முன்னேற்றும், மேலும் இவ்வளர்ச்சி பல்வேறு துறைகளுக்கு சாதகமான விளைவுகளை வழங்கும்” என்று , நேற்று இரவு கோத்தா பாரு கிராமப்புற உருமாற்ற மையத்தில் (RTC) ஆர்க்கிட், ஃப்ளோரா மற்றும் மூலிகைச் செடி திருவிழா 2022 ஐத் திறந்து வைத்தபோது, அவர் கூறினார்.
ஏழாவது முறையாக நடைபெறும் ஆர்க்கிட், ஃப்ளோரா மற்றும் ஹெர்பல் ஃபெஸ்டிவல் 2022 எதிர்வரும் ஜூன் 12 ஆம் தேதியன்று முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.