பெட்டாலிங் ஜெயாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 147 பேர் கைது!

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 4 :

பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் மே வரை நடத்தப்பட்ட 39 நடவடிக்கைகளின் மூலம், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறையின் தலைமை, துணை ஆணையர் முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமிட் கூறுகையில், இந்த காலகட்டத்தில் மொத்தம் 7,352 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர் என்றார்.

1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 45 (A) இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து நபர்களும், பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்கு மேல் மது அருந்தியதற்காக விசாரிக்கப்படுகிறார்கள்.

“இந்த குற்றத்திற்காக, குறைந்தபட்ச அபராதம் RM10,000 மற்றும் அதிகபட்சமாக RM30,000 வரை விதிக்கப்படலாம். மேலும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் இரண்டு ஆண்டுகள் வாகனம் ஓட்டும் உரிமம் பெற தகுதியற்றது ஆக்கப்படலாம் ” என்று அவர் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த பிரிவின் கீழ் மொத்தம் 48 குற்றச்சாட்டுகள் பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதே பிரிவின் கீழ் மீதமுள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் குற்றச்சாட்டு செயல்முறைக்கான அடுத்த நடவடிக்கையில் இருப்பதாக முகமட் ஃபக்ருதீன் கூறினார்.

“பெட்டாலிங் ஜெயா மாவட்ட போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவு, திட்டமிட்டபடி ஆண்டு முழுவதும் இந்த நடவடிக்கைகளை தீவிரமாக நடத்தும்.

“எனவே, எந்தவொரு விரும்பத்தகாத சம்பவங்களையும் தவிர்க்க, அனைத்து சாலை பயனர்களும் விதிகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்குமாறு நாங்கள் நினைவூட்டுகிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here