சபாவில் குடும்ப வன்முறை வழக்குகள் அதிகரிப்பு – துணை அமைச்சர் டத்தோ சித்தி ஜைலா

கோத்தா கினாபாலு, ஜூன் 6:

சபாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் பதிவான 126 வழக்குகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் குடும்ப வன்முறை வழக்குகள் 145 ஆக அதிகரித்துள்ளன.

கடந்த ஆண்டு முதல் நான்கு மாதங்களில் நாடு முழுவதும் 627 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 126 சபாவில் நடந்ததாக பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ சித்தி ஜைலா முகமட் யூசாஃப் கூறினார்.

இந்த ஆண்டு, ‘அதே காலகட்டத்தில் நாடு முழுவதும் பதிவான குடும்ப வன்முறை வழக்குகளின் எண்ணிக்கை 576 ஆகக் குறைந்துள்ளது, ஆனால் சபாவில் குடும்ப வன்முறை வழக்குகள் 145 ஆக அதிகரித்துள்ளன’ என்று, நேற்று ‘‘Semarak Skuad Waja Sabah 2022’’ திட்டத்தை தொடக்கிவைக்கும்போது சித்தி ஜைலா கூறினார்.

வஜா ஸ்குவாட், பெண்கள் குற்ற எதிர்ப்பு இயக்கம், பெண்கள் மற்றும் குடும்பத்திற்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கான, பொது விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட, ஒரு தன்னார்வத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here