எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் ஜூன் 16 அன்று வெளியாகும்- கல்வி அமைச்சகம்

கோலாலம்பூர், ஜூன் 7:

2021 ஆம் ஆண்டிற்கான சிஜில் பெலாஜாரான் மலேசியாவின் (SPM ) பரீட்சை முடிவுகள் வரும் வியாழக்கிழமை (ஜூன் 16) வெளிவரும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளில் காலை 10 மணிக்கு பெற்றுக் கொள்ளலாம் என்றும், தனியார் தேர்வுதாரர்களுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் தபால் மூலம் அனுப்பப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 16 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜூன் 24 ஆம் தேதி மாலை 6 மணி வரை myresultspm.moe.gov.my என்ற இணையதளம் மூலம் தங்கள் பரீட்சை முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அதுதவிர SPMNoKPAngkaGiliran என டைப் செய்து 15888க்கு அனுப்புவதன் மூலம் குறுகிய செய்தி சேவை (SMS) மூலமாகவும் முடிவுகளைப் பெறலாம். இந்த அமைப்பு ஜூன் 16, 2022 அன்று காலை 10 மணி முதல் ஜூன் 22 அன்று மாலை 6 மணி வரை செயல்படுத்தப்படும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here