இஸ்லாமியர்கள் Bon Odori திருவிழாவில் பங்கேற்க தடையில்லை என்கிறார் பினாங்கு முஃப்தி

Bon Odori திருவிழா போன்ற கலாச்சார நிகழ்வுகளில் இஸ்லாமியர்கள் பங்கேற்க தடை இல்லை என்று பினாங்கு முஃப்தி இப்போது கூறுகிறார். ஜப்பானிய பண்டிகை குறித்த தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து தற்பொழுது பின்வாங்கினார்.

எவ்வாறாயினும், முன்னோர்களின் ஆவிகளை வழிபடுவது உள்ளிட்ட மதக் கூறுகள் இருந்தால் இதுபோன்ற நிகழ்வுகளை இஸ்லாமியர்கள் தவிர்க்க வேண்டும் என்று வான் சலீம் வான் முகமட் நூர் கூறினார். Bon Odori திருவிழாவில் இதுபோன்ற சடங்குகள் மற்றும் கூறுகள் மீது சந்தேகம் இருந்தால், அதைத் தவிர்க்க அவர்களுக்கு உரிமை உண்டு என்று அவர்  கூறினார்.

ஒருவரின் நம்பிக்கையை பாதிக்கலாம் என்ற கவலைகள் இருப்பதால், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும்போது அமைப்பாளர்கள் இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் வான் சலீம் கூறினார். மலேசியாவின் பல்வகை கலாச்சார மற்றும் பல இன சமூகத்தினரிடையேயான உறவுகளை சீர்குலைக்கும் எந்தவொரு தவறான புரிதலையும் தவிர்க்க சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை அவர் வலியுறுத்தினார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு  வான் சலீம், ஜூலை 30 அன்று பினாங்கில் நடைபெறும் போன் ஓடோரி திருவிழாவில் பங்கேற்க வேண்டாம் என்று இஸ்லாமியர்களுக்கு அறிவுறுத்தினார். இதுபோன்ற பண்டிகைகளைத் தவிர்த்து இஸ்லாமியர்கள் தங்கள் இஸ்லாமிய நம்பிக்கையின் தூய்மையை எப்போதும் பாதுகாக்க வேண்டும் என்றார்.

சமய விவகார அமைச்சர் இட்ரிஸ் அஹ்மத், வருடாந்திர கோடை விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று இஸ்லாமியர்களுக்கு நினைவூட்டியதை அடுத்து, இந்த கொண்டாட்டம் “பிற மதங்களின் கூறுகளால் தாக்கப்பட்டது” என்று கூறி, Bon Odori மீது சர்ச்சை எழுந்தது.

இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான ஜாகிம் நடத்திய ஆராய்ச்சி, கொண்டாட்டத்தில் இத்தகைய செல்வாக்கு இருப்பதை உறுதிப்படுத்தியதாக இட்ரிஸ் கூறினார். இன்று முன்னதாக, சிலாங்கூரின் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா, “சமயம் மற்றும் கலாச்சாரத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள” ஷா ஆலத்தில் நடைபெறும்  Bon Odoriவிழாவில் கலந்து கொள்ளுமாறு இட்ரிஸை அழைத்தார்.

சுல்தான் ஷராபுதீன், அமைச்சர் ஜாக்கிமைப் பயன்படுத்தி “குழப்பமான மற்றும் தவறான அறிக்கைகளை வெளியிடுவதை விரும்பவில்லை, இது துறையின்  நற்பெயரை பாதிக்கலாம் என்றார். மலேசியாவில் ஜப்பானிய சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்டம், கோவிட்-19 காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறது. ஜூலை 16 ஆம் தேதி ஷா ஆலமில் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here