ஜெல்லி மீன்கள் தாக்கி அதிகமானோர் பாதிக்கப்படுவதால் கடற்கரைக்கு செல்லும்போது விழிப்புடன் இருப்பீர்

கோலா தெரெங்கானு, பெசுட்டில் சமீபத்தில் ஜெல்லிமீன்களால் பல நேரடி தாக்குதல்கள் பதிவாகியதை அடுத்து, கடற்கரைக்கு வரும் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெசுட் மாவட்ட மலேசிய குடிமைத் தற்காப்புப் படை (ஏபிஎம்) அதிகாரி கேப்டன் (பிஏ) ரம்லான் ரோஸ் வாஹித் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தில், காலை 11.45 மணியளவில் பெசுட்டின் புலாவ் ருவில் தனது குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி ஜெல்லிமீன்களால் தாக்கப்பட்டார்.

இதன் விளைவாக, சிறுமியின் உடல் முழுவதும் ஒவ்வாமை ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர் பயணித்த படகு கடற்கரைக்கு வந்தவுடன், பெசுட் ஏபிஎம் மீட்புக் குழுவினரால் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

அவர் கூறியபடி, அடுத்த நாள், பெசுட் அருகே உள்ள பந்தாய் புக்கிட் கெலுவாங்கில் குளித்துக் கொண்டிருந்த 10 வயது சிறுவனுக்கும் மாலை 6.50 மணியளவில் ஜெல்லிமீன் குத்தியதால் ஒவ்வாமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.மாவட்டத்தைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் ஏபிஎம் பெசுட் தொடர்ந்து ரோந்துப் பணியை  அதிகரிக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here