பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண், பாதுகாப்பாக மீட்பு

குவாந்தான், ஜூன் 11 :

தஞ்சோங் லம்பூர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த ஒரு பெண்ணை, மீட்பு குழுவினர் இன்று அதிகாலை பாதுகாப்பாக மீட்டனர்.

மலேசியாவின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பகாங் மாநில, மக்கள் தொடர்பு அதிகாரி, சுல்ஃபாட்லி ஜகாரியா கூறுகையில், காலை 5.08 மணியளவில் MERS- 999 மூலம் தமது துறைக்கு ஒரு அவசர அழைப்பு வந்ததாக கூறினார்.

அதிகாலை 5.17 மணியளவில் பாலத்தில் இருந்து குதித்தபோது, ​​கடவுள் செயலால் அருகில் உள்ள பகுதியில் மீன்பிடி படகு ஒன்று இருந்தது.

“தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரின் விரைவான நடவடிக்கை மற்றும் அப்பகுதி மீனவர்களின் உதவியுடன், பாதிக்கப்பட்டவரை ஆற்றங்கரைக்குக் கொண்டு வந்தனர்.

“அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவருக்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு (HTAA) அனுப்பப்பட்டார், ”என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஒன்பது உறுப்பினர்களுடன் மூத்த தீயணைப்பு அதிகாரி II பக்தியார் இஸ்கந்தர் முகமட் தலைமையில் நடந்த மீட்பு நடவடிக்கை, இன்று காலை சுமார் 5.52 மணியளவில் முடிவடைந்தது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here