19 வருடங்களின் பின்னர் DNA மூலம் மாட்டிக் கொண்ட கற்பழிப்பு சந்தேக நபர்

கோலாலம்பூர், ஜூன் 11 :

பேராக்கின் பாகான் செறையில் 19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கற்பழிப்பு வழக்கில் சந்தேக நபர் என நம்பப்படும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் ஜலீல் ஹாசன் கூறுகையில், டியோக்சிரைபோநியூக்ளிக் அமிலம் (DNA) பெறப்பட்ட தரவு மூலம் பெறப்பட்ட தகவலின் மூலம், அந்த 40 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்றார்.

” 2003 ஆம் ஆண்டு பேராக்கில் உள்ள பாகாய் செறை என்ற இடத்தில் நடந்த கற்பழிப்பு வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக, நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் ஒருவரை JSJ புக்கிட் அமான் காவல்துறையினர் கைது செய்தனர்.

குற்றவியல் சட்டத்தின் 376 வது பிரிவின் கீழ் வழக்கின் விசாரணையில் உதவுவதற்காக சந்தேக நபர் ஜூன் 10 (நேற்று) முதல் திங்கள் வரை நான்கு நாட்களுக்கு கெரியான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இவ்வழக்கு தொடர்பில் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றச்சாட்டின் நோக்கத்திற்காக அறிவுறுத்தல்களைப் பெறுவதற்கான நடவடிக்கைக்காக, விசாரணைப் பத்திரம் உடனடியாக சட்டமா அதிபரின் அறைக்கு அனுப்பப்படும் என்றும் அப்துல் ஜலீல் கூறினார்.

“விசாரணையின் தொடக்கத்தில் தகவல் பற்றாக்குறையை எதிர்கொண்ட போதிலும், குற்றவாளிகளைக் கண்டறிவதில் காவல்துறை பல்வேறு அணுகுமுறைகளை தொடர்ந்தும் செயல்படுத்தும்.

அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக, குற்றச் செயல்களை எதிர்த்துப் போராடும் முயற்சியில் காவல்துறைக்கு சமூகத்தின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here