நடைபாதையில் மரம் நட்டது தொடர்பான பிரச்சனை : மூத்த குடிமகனை வேண்டுமென்றே குச்சியால் தாக்கி காயப்படுத்தியதாக அண்டை வீட்டுக்கார் மீது குற்றச்சாட்டு

கோத்தா பாரு, ஜூன் 16 :

கடந்த வாரம் நடைபாதையில் மரம் நட்டது தொடர்பான பிரச்சனையில், குச்சியைப் பயன்படுத்தி மூத்த குடிமகனான தனது அண்டை வீட்டாரை வேண்டுமென்றே காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், வேலையில்லாத ஒருவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்ட, 64 வயதான கோ கீ டூன், மாஜிஸ்திரேட் முஹம்மது ஃபித்ரி மொக்தார் முன்நிலையில், மொழிபெயர்ப்பாளரால் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், அவர் தான் குற்றமற்றவர் என்று கூறினார்.

குற்றச்சாட்டின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மீது வேண்டுமென்றே ஹார் கெங் வா, 69, என்ற பாதிக்கப்பட்டவரை குச்சியைப் பயன்படுத்தி, காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது, இதனால் மூத்த குடிமகன் தலையின் மேல் பகுதியில் காயம் ஏற்பட்டது.

ஜூன் 9 ஆம் தேதி நண்பகல் 12.20 மணியளவில் இங்குள்ள ஜாலான் கெலோச்சோர், பாடாங் கெலோச்சோர் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டின் அருகில், குற்றம் சாட்டப்பட்டவர் இந்தக் குற்றத்தைச் செய்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது அந்த தண்டனைகளில் ஏதேனும் ஒன்றை விதிக்கும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324 இன் கீழ் ஜீ டூன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் தேசிய சட்ட உதவி அறக்கட்டளையின் (YBGK) வழக்கறிஞர் அரியானி முகமட் அமீன் ஆஜரானார். அதேசமயம் துணை அரசு வழக்கறிஞர், ஷரிபா அமிர்தா ஷாஷா அமீர் ஷரிபுதினால் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கில் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு தனி நபர் உத்தரவாதத்துடன் RM4,500 ஜாமீன் வழங்கியது மற்றும் வழக்கை மீண்டும் குறிப்பிடுவதற்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றம் விதித்த ஜாமீனை செலுத்தினார்.

ஜாலான் கெலோச்சோரில் உள்ள தங்கள் வீட்டின் அருகே மரங்களை நடுவது குறித்து அவர்களுக்குள் ஏற்பட்ட தவறான புரிதலின் காரணமாக, மூத்த குடிமகன் ஒருவரை அவரது பக்கத்து வீட்டுக்காரர் குச்சியால் அடிதார் என்றும் அதன் பின்னர் பலியானவர் வீட்டின் சமையலறையில் மயங்கிய நிலையில் அவரது மனைவியால் கண்டெடுக்கப்பட்டார் என்றும் முன்னர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here