லங்காவி கடற்பகுதியில் பயணிகள் படகு தீப்பிடித்து எரிந்ததாக பரவிய செய்தி போலியானது

லங்காவி, ஜூன் 16 :

லங்காவி கடற்பகுதியில், நேற்று பயணிகள் படகு தீப்பிடித்து எரிந்ததாக பரவிய செய்தியை, மலேசிய கடல்சார் அமலாக்க துறை மறுத்துள்ளது.

முன்னதாக, வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் டசின் கணக்கான பயணிகளுடன் இருந்த ஒரு எரியும் பெரிய படகிலிருந்து மற்றய படகுகளுக்கு பயணிகளை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பெரிதும் பகிரப்பட்டன.

கெடா மற்றும் பெர்லிஸ் கடல்சார் அமலாக்க துறை இயக்குநர், முதல் கடல்சார் அட்மிரல் ரோம்லி முஸ்தபா கூறுகையில், சம்பந்தப்பட்ட வீடியோ 2019 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தினுடையது என்றும் அதுவே மீண்டும் பரப்பப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

“சமூகத்தின் மீது, குறிப்பாக லங்காவியில் உள்ள சுற்றுலாத் துறையினர் மீது அவரது இந்தச் செயல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ளாமல், பொறுப்பற்ற தரப்பினரால் இந்த வீடியோ வேண்டுமென்றே சமூக ஊடகங்களில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது” என்று அவர் நேற்று இரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

எனவே, குழப்பத்தைத் தவிர்க்கவும், சமூகத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தவும் பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பொதுமக்கள் அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக ரோம்லி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here