பள்ளி மாணவர்கள் இருவர் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது

கோத்தா பாரு; பாசிர் தும்போ அருகே உள்ள சுங்கை மச்சாங் லிம்பாட்டில் நேற்று மாலை குளித்த போன்டோக் பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பாசிர் தும்போ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர்  தரஃப் முகமட் சக்காரியா, இரவு 7.16 மணிக்கு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், நிலையத்தைச் சேர்ந்த 6 பணியாளர்களும் Pengkalan Chepa  நீர் மீட்புப் பிரிவில் இருந்து எட்டு டைவர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

சாட்சிகளின் வாக்குமூலங்களின்படி, உயிரிழந்த இருவரும் நீரில் மூழ்குவதற்கு முன்னர் மாலை 6.45 மணியளவில் ஆற்றில் குளித்ததைக் கண்டதாக தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்து 200 மீட்டர் சுற்றளவில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்கள் முகமது ஹபீஸ் 17, மற்றும் முகமட் லோக்மான் 18, என அடையாளம் காணப்பட்டவர்கள். அவர்கள் மேலும் ஒன்பது நண்பர்களுடன் ஆற்றுக்குச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் மற்றும் மீட்புப் பணிகள் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாகவும், சம்பவ இடத்திற்கும் பொன்டோக் பள்ளிக்கும் இடையே சுமார் 200 மீட்டர் தூரம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here