சினோபார்ம் தடுப்பூசியை லாவோஸுக்கு நன்கொடையாக வழங்கியது மலேசியா.. !

கோலாலம்பூர், ஜூன் 22 :

மலேசிய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 500,000 டோஸ் சினோபார்ம் கோவிட்-19 தடுப்பூசி லாவோஸ் தலைநகர் வியன்டியானுக்கு வந்துள்ளது என்று உள்ளூர் தினசரி பத்திரிக்கை வியன்டியான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மலேசியாவிலிருந்து நன்கொடையான 283,400 அஸ்ட்ராஜெனெகா கோவிட்-19 தடுப்பூசி கடந்த டிசம்பரில் லாவோஸுக்கு வந்தது. இந்த நன்கொடைகள் கோவிட்-19 தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு மலேசியாவின் பங்களிப்பின் ஒரு பகுதியாகும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது .

மேலும், ‘இந்த ஆண்டு இறுதிக்குள் வயது வந்தோரில் குறைந்தது 80 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போடுவதற்கான லாவோஸின் இலக்கிற்கு, மலேசியாவின் இந்த நன்கொடை வலுச்சேர்க்கிறது ‘ என்று லாவோ தினசரி அறிக்கை குறிப்பிட்டிருந்ததை, அப்பத்திரிகை மேற்கோள் காட்டியிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here