தாய்லாந்தில் இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை

பாங்­காக், ஜூன் 25 :

தாய்­லாந்­தில் முக்­கிய கோவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்தப்பட்­டுள்­ளன. முகக்­க­வ­சம் இனி அணி­ய வேண்டியதில்லை மற்றும் மது­பா­னக் கூடங்­கள் இர­வில் நீண்ட நேரம் செயல்­படலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் குறைந்­துள்­ள­தை தொடர்ந்து, சுற்­று­லாப் பயணி­களை அதிகம் நம்­பி­யி­ருக்­கும் தாய்­லாந்து எஞ்­சிய கட்­டுப்­பா­டு­க­ளை­யும் நீக்­கி இ­ருக்­கிறது.

நாடு முழு­வ­தும் இனி முகக்­க­வ­சம் அணி­வது அவரவர் விருப்­பத்­தைப் பொருத்­தது என்று பிர­த­மர் பிர­யுத் சான்-ஓ-சா அறிக்கை வாயிலாகத் தெரி­வித்து இருந்­தார். இதன் மூலம் 2021ல் அறி­முகப்­ப­டுத்­தப்­பட்ட கட்­டாய முகக் ­க­வ­சம் முடி­வுக்கு வரு­கிறது.

குழு நட­வ­டிக்­கை­க­ளின்­போது தொற்று ஏற்­ப­டு­வ­தைத் தடுக்க, நாட்­பட்ட நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்ந்து முகக்­க­வ­சம் அணிய வேண்­டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மது­பா­னக் கூடங்­கள், இரவு கேளிக்கை விடு­தி­கள், கர­வோக்கே நிலை­யங்­கள் உள்ளிட்ட பொழு­து­போக்குத் தளங்­கள் வழக்­க­மான நேரங்களில் செயல்படலாம் என்று அறிக்கை மேலும் தெரி­வித்­தது.

முக்­கிய சுற்­றுலாப் பயணி­களை ஈர்க்­கும் இரவு நேர பொழு­து­போக்கு இடங்­கள் மீண்டும் செயல்­பட இம்­மா­த முற்­ப­குதி­யில் அனு­ம­தி வழங்கப்பட்டது.

ஆனால் நள்­ளி­ர­வில் மூட வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டது. சென்ற ஏப்­ர­லில் புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் 20,000லிருந்து 2,000க்கு குறைந்­த­தால் தென்கிழக்கு ஆசி­யா­வின் இரண்­டா­வது ஆகப்­பெ­ரிய பொரு­ளி­யல் நாடான தாய்­லாந்­தில் பய­ணம், வர்த்­த­கங்­க­ளுக்­கான கட்­டுப் ­பா­டு­கள் அண்­மை­யில் தளர்த்­தப்­பட்­டன.

இந்நிலையில் சுற்றுலாவை நம்பியுள்ள தாய்லாந்து, சுற்றுலா பயணிகளை மீண்டும் ஈர்ப்பதற்காக கடுமையான கொவிட்-19 கட்டுப் பாடுகளை தளர்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here