மலாக்காவில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களை சொக்சோவில் பதிவு செய்யத் தவறியதற்காக 45 முதலாளிகளுக்கு அபராதம்..!

மலாக்கா, ஜூன் 25 :

நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 24) மலாக்கா சமூகப் பாதுகாப்பு அமைப்பினரால் (Socso) மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில், மாநிலத்தில் மொத்தம் 45 முதலாளிகள் தங்கள் ஊழியர்களையும் நிறுவனங்களையும் பதிவு செய்யத் தவறியது கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக மொத்தம் RM24,500 மதிப்புள்ள அபத்தங்களையும் விதித்தது.

மலாக்கா சொக்சோ இயக்குநர் அப்துல் ரசாக் உமர் கூறுகையில், அவர்களில் சிலர் பகுதி நேர பணியாளர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்துவதாக சாக்குப்போக்கு கூறியதாகவும், சிலர் சோதனையின் போது தங்கள் ஊழியர்களை உடனடியாக வீட்டிற்கு செல்லுமாறு கூறியதாகவும் கூறினார்.

அவர்கள் கூறிய காரணங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ள முடியாதது, ஏனெனில் ஊழியர்  தங்கள் வணிக வளாகத்தில் ஒரு நாள் மட்டுமே பணிபுரிந்தாலும், முதலாளிகள் Socso-க்கு பங்களிக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது, Op Gegar Malam என்ற குறியீட்டுப் பெயருடன் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கை, நேற்றிரவு முடிவடைந்த பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கையில் செர்காம், உம்பை மற்றும் க்ளேபாங் பகுதிகளைச் சுற்றியுள்ள 168 வளாகங்களில் மேற்கொள்ளப்பட்டதாக அப்துல் ரசாக் கூறினார்.

“ஊழியர்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 இன் பிரிவு 4 இன் கீழ் நடந்த நடந்த குற்றங்களுக்காக, அதாவது நிறுவனத்தை பதிவு செய்யத் தவறியதற்காக, RM18,500 மதிப்புள்ள 34 அபராதங்கள் வழங்கப்பட்டதுடன் அதே சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ், பணியாளர்களை பதிவு செய்ய தவறியதற்காக RM6,000 மதிப்புள்ள 11 அபராதங்கள் வழங்கப்பட்டன.

“விசாரணை நடத்தப்பட்டால், அவர்களுக்கு RM10,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்,” என்று அவர் கூறினார்.

இரவு நேரங்களில் நடத்தப்படும் வணிகங்கள், குறிப்பாக உணவகங்கள் மற்றும் பலசரக்கு கடைகளில் இந்த நடவடிக்கையின்போது கவனம் செலுத்தியதாக அப்துல் ரசாக் மேலும் கூறினார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை, மொத்தம் 25 முதலாளிகள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாகவும், 2021 ஆம் ஆண்டில், மாநிலத்தில் மொத்தம் 99 முதலாளிகளுக்கு எதிராக பல்வேறு குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் குறித்த காலத்திற்குள் விபத்துக்கள் ஏற்பட்டால் அது குறித்து நிறுவனத்திடம் தெரிவிக்கத் தவறிய முதலாளிகள் மீதும் மலாக்கா சொக்சோ நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here