பத்து பகாட், ஜூன் 25:
இங்குள்ள ஜாலான் பாரிட் ராஜா டாராட்டில், இன்று அதிகாலை 1.55 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் உயிரிழந்தனர், பின்னிருக்கை பயணியான மற்றொருவர் லேசான காயமடைந்தார்.
பத்து பகாட் மாவட்ட காவல்துறை தலைமை, துணை ஆணையர் இஸ்மாயில் டோல்லா கூறுகையில், பாரிட் ராஜாவில் இருந்து செங்காராங் நோக்கி செல்லும் வழியில் முகமட் ஃபௌசி போயானி, 16, மற்றும் மற்றொரு 17 வயது பின் இருக்கையில் பயணஞ் செய்த வாலிபர் ஆகியோர் மோட்டார் சைக்கிளை ஓட்டியபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வந்தபோது, முன்பக்கத்தில் இருந்து வந்த முகமட் அஃபிக் ஹுசின் (20) என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த பாதையில் நுழைந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
“விபத்தின் விளைவாக, முகமட் பௌசி மற்றும் முகமட் அபீக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
“பின் இருக்கையில் பயணஞ் செய்த 17 வயது இளைஞன் லேசான காயம் அடைந்து, சிகிச்சைக்காக பத்து பகாட்டில் உள்ள சுல்தானா நோரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் ,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41 (1)ன்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.