காணாமல் போன இளம்பெண் தொடர்பாக பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை

செந்தூல் கம்போங் பண்டார் டாலாமில் ஜூன் 20 முதல் காணாமல் போன நூர் ஹிதாயாதி துவைஜா மஸ்லான் என்ற இளம்பெண் காணாமல் போனது குறித்து காவல்துறைக்கு புகார் கிடைத்துள்ளதாக செந்துல் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி பெஹ் எங் லாய்  தெரிவித்தார்.

17 வயது சிறுமியின் காணாமல் போனது குறித்த போலீஸ் புகாரினை அவரது பெற்றோர் ஜூன் 21 அன்று தாக்கல் செய்ததாக அவர் கூறினார்.

அன்றைய தினம் இரவு 7.20 மணியளவில் கம்போங் பண்டார் டாலாமில் இருந்த  உள்ள ஒரு குடியிருப்பின் தனது வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண் காணாமல் போனதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அச்சிறுமி ஒரு கடைக்குச் செல்வதற்காக தங்கள் வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது, அன்றிலிருந்து அவர் தொடர்பு கொள்ளவில்லை என்று அவர் இன்று இரவு ஒரு அறிக்கையில் கூறினார்.

காணாமல் போன சிறுமியை பற்றிய தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி, இன்ஸ்பெக்டர் நோரமலினா முகமட் ஜமீலை 017-3185868 என்ற எண்ணில் அல்லது செந்துல் மாவட்ட காவல்துறை தலைமையக செயல்பாட்டு அறைக்கு 03-40482222. என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here