தவறான புரிதலினால் 16 வயது காதலியை கொன்ற காதலன்

கிள்ளான், பாண்டமாரான் கம்போங் இடமான் என்ற பகுதியில் ஒரு மாணவிக்கும் வேலையில்லாதவருக்கும் இடையேயான காதல்  பிரச்சினையில் முடிந்தது. அவ்வாடவர்  காதலியை தலையணையை கொண்டு அழுத்தி கொலை செய்துள்ளார்.

நேற்று (ஜூன் 26) அதிகாலை 2 மணியளவில் அந்த நபர் 16 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தென் கிள்ளான் OCPD உதவி ஆணையர் சா ஹூங் ஃபோங் கூறுகையில், 24 வயதுடைய நபர் அச்சிறுமியை கொலை செய்து தனது அறையிலிருந்து வெளியே எடுத்து வந்து வீட்டின் முற்றத்தில் வைத்த பிறகு தனது பெற்றோரின்  அறை கதவைத் தட்டியபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாகக் கூறினார்.

சம்பவத்தின் போது குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் சத்தம்  கேட்கவில்லை. இன்று (ஜூன் 27) செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், அதிர்ச்சியடைந்த குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக காவல்துறையைத் தொடர்புகொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ அதிகாரிகள்  சிறுமியின் மரணத்தை உறுதிப்படுத்தியதாக ஏசிபி சா கூறினார்.

பெற்றோர் விவாகரத்து செய்த பிறகு இறந்தவர் தனது மாமாவுடன் பூச்சோங்கில் வசித்து வந்தார் என்று அவர் கூறினார். ஒரு வருடமாக காதலித்து வந்த அந்த ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் குடும்பத்தினருக்கு தெரிந்தவர்கள்.இதற்கு முன்பும் பலமுறை அந்த பெண்ணை தனது வீட்டிற்கு  அழைத்து வந்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், படுக்கையறையில் அவர்களுக்கு இடையே தவறான புரிதல் ஏற்பட்டது என்று அவர் கூறினார். இறந்தவரின் உடலில் முதற்கட்ட பரிசோதனையில் அவரது முகம் மற்றும் கழுத்தில் சில கீறல்கள் மற்றும் காயங்கள் இருப்பதாக ACP சா மேலும் கூறினார்.

பிரேத பரிசோதனையில் மூச்சுத் திணறல் காரணமாக மரணம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஜூலை 3 வரை விளக்கமறியலில் உள்ளார் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here